இலங்கையில் போதியளவு எரிபொருள் கையிருப்பில்- மஹிந்த அமரவீர.


அம்பலந்தொட்ட இ.போ.ச. டிப்போவுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த பதற்ற நிலைமை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவிய வதந்தி காரணமாக நாட்டில் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். 

இருப்பினும், போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இதனால், மக்கள் பதற்றமடைய வேண்டிய ஒரு நிலைமை ஏற்படாது எனவும் எரிபொருள் விலை அதிகரிப்புக்களும் இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.