தைப்பொங்கலும் தமிழர்களின் வாழ்வியலும்...


தைப்பொங்கல் என்பது சங்க காலம் முதற்கொண்டு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அக் காலத்தில் பொங்கல் திருவிழாதிருவிழா என்பது 28 நாட்கள் நடைபெற்று வந்ததுடன் "இந்திர விழா" என்று அழைக்கப்பட்டதும் சிலப்பதிகாரத்தில் வரும் "இந்திரவிழா ஊரெடுத்த கதை" மூலமாகவும் "மணிமேகலையில்" "விழாவறை காதை" மூலமும் அறியமுடிகிறது

வானத்தில் அசைகின்ற மதில்களை உடைய நகரை அழித்த "தொடித்தோட் செம்பியன்" எனப் பெயர்பெற்ற சோழ மன்னன் ஒருவன் இந்திரனிடம் சென்று தன்னுடைய நகரில் 28 நாட்கள் தங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அந்த 28நாட்களும் இந்திரா விழாவாக அன்றிலிருந்து கொண்டாடப்பட்டு வந்துள்ளதுவந்துள்ளது. அந்த 28 நாட்களும் முதற் தெய்வம் "சிவன்" தொடக்கம் சிறு தெய்வம் "சதுக்கபூதம்" வரை விரதமிருந்து வழிபடப்பட்டு வந்துள்ளது.

வீதிகளுக்கு எல்லாம் புது மணல் போட்டு வீதிகள் புதிதாக்கப்படும். ( தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்வதன் பொருள் இதுவே) அந்த பாதை முழுவதும் தோரணங்களும், குலைகளுடன் கூடிய பாக்கு மரமும், வாழைமரமும், கரும்பும், பூக்கொடி வல்லியும் கொண்டு அலங்கரித்து பூரண கும்பமும் பாவை விளக்கும் வைத்து வீட்டு தூண்களெல்லாம் மாலைகளால் அலங்கரிப்பாட்டு திருவிழாக்கோலம் காணுமாம்..

மகாதேவனாகிய சிவனின் ஆலயத்திலும் முருகனின் ஆலயத்திலும் வெண்சங்கு நிறமுடைய உழவர்கள் தெய்வமாகிய பலராமனது கோவிலிலும், நீல நிறமுடைய தேகம் கொண்ட திருமால் கோவிலிலும், வெண்குடை கொண்ட இந்திரன் கோவிலிலும் நான்மறை வேதங்கள் கூறும் ஓமங்கள் நடத்தப்படுவதுடன் நால்வகை தேவர்களுக்கும், 18கணங்களுக்கு என அனைவருக்கும் ஒவ்வொரு பக்கமாக விழா எடுக்கப்படுமாம்

ஒருபுறம் வழிபாடுகள் நடைபெற மறுபுறம் யாழ் இசை கருவி வித்துவான்கள், புல்லாங்குழல் வித்துவான்கள் கூத்து கட்டுபவர்கள் என சேர்ந்து இசை கச்சேரிகள் நடக்க மறுபுறம் அறம் சார்ந்த தத்துவங்களை கூறி நல்லவழி படுத்தும் சொற்பொழிவுகளும் நடைபெறுமாம்.

இவ்வாறாக 28நாட்கள் தொடரும் இவ் விழாவில் "அவித்த அவரை, துவரை பயிறுகளையும், எள்ளு உருண்டை, பொங்கல்சோறு போன்றவற்றை இந்திரனுக்கு பொங்கலாக படைத்து இந்திரனை மகிழ்வூட்டி வந்துள்ளனர். இந்த விழா சுருங்கி சுருங்கி தைப்பொங்கலாக மாறிவிட்டது.

இந்த விழா காலப்போக்கில் சுருங்கி சுருங்கி தமிழகத்தில் 4 நாட்களும் தமிழகம் தவிர்ந்த பிற பகுதிகளில் 2நாட்களுமாக கொண்டாடப்படுவதுடன், வழிபாட்டு முறைகளும் கைவிடப்பட்டு கைவிடப்பட்டு சூரிய வழிபாட்டுடன் நிற்கிறது அதுவும் சமீப காலமாக குறிப்பாக நகர் புறங்களில் வீட்டுக்குள் கடமைக்கு பொங்கும் நிலைக்கு வந்துவிட்டது. காலப்போக்கில் தைப்பொங்கல் என்பது காலண்டரில் மட்டும் வரும் ஒரு நாளாக மாறினாலும் மாறலாம்.

No comments

Powered by Blogger.