நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் திரைப்படமாகிறது; விரைவில் வெள்ளித் திரையில்!!

நடிகை நயன்தாரா மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திரைப்படமாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளதுடன், “நானும் சிங்கிள் தான்” என தலைப்பிடப்பட்டுள்ளது.
Image result for நயன்தாரா - விக்னேஷ்
இது குறித்து படத்தின் இயக்குனரான கோபி கூறுகையில், “தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.

இந்த படத்தின் ஹீரோவின் இலட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் ஹீரோவின் ஆசை அது நிறைவேறியாதா? என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.