நித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Image result for நித்தியானந்தா
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை இண்டர்போல் உதவியுடன் அகமதாபாத் மற்றும் பெங்களூர் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நித்தியானந்தாவுக்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள யோகினி சர்வஜன பீடம் ஆசிரமத்தைச் சேர்ந்த சதீஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீநித்திய ஈஷ்வர பிரியானந்தா என்பவர் கடந்த சில நாட்களாக மாயமானார்.

இந்நிலையில் அவரது உடல் இந்திய – நேபாள எல்லையில் கண்டெடுக்கப்பட்டு வாரணாசியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.