பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் அட்டகாசமான போட்டோஷூட் ; ரசிகர்கள் குதூகலம்!!!

(யாழ் லக்சன்)

தென்னிந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி குறுகிய நாட்களுக்குள் மக்களின் மனங்களுக்குள் செல்லப் பிள்ளையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந் நிலையில் குறித்த நிகழ்ச்சியின் போது காதல் சண்டை நட்பு அரவணைப்பு பாசம் என லாஸ்லியாவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்களும் எழுந்துகொண்டிருந்தபோதும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக தொடர்ந்து மிளிர்ந்துவருகின்றார் லொஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனின் நிறைவடைந்த பிற்பாடு லாஸ்லியாவை ரசிகர்கள் தேடியவண்ணமாக இருந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக சமூகவலைத்தளத்தில் தனது முதல் போட்டோசூட் என குறிப்பிட்டு தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந் நிலையில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருவதுடன் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுவருகின்றது.

No comments

Powered by Blogger.