மனநல வைத்தியரிடம் ரஞ்சனை அனுப்புங்கள்; கெஹெலிய ரம்புக்கல!!

சுவீஸ் தூதரக ஊழியரை பரிசோதித்ததைப் போன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவையும் மனநல வைத்தியரிடம் அனுப்பி பரிசோதிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “ரஞ்சன் நாடாளுமன்றத்திலுள்ள 224 பேரையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

அந்தவகையில் தற்போது ரஞ்சனின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் நாடாளுமன்றத்திலுள்ள 224 பேரின் நலனுக்காகவும் அவரைப் பரிசோதிப்பது அவசியம்.

மேலும் அவர் தனது நோய் குறித்து அறியாதவராகவும் இருக்கக் கூடும். ஏனெனில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியது கிடையாது. இவரும் அப்படியாக இருக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.