களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் செய்த மனிதநேயப்பணி!!

கிழக்கில் தற்போது செல்வம் கொழிக்கும் பல ஆலயங்கள் காணப்படுகின்றன இருந்தும் அங்கு வருமானமாக சேரும் பணம் அத்தனையும் வங்கிகளிலே வட்டிக்கு மேல் வட்டி அதிகரித்து அளவுக்கதிகமாக சேர்த்து வைக்கப்படுகிறதே தவிர அந்த செல்வத்தால் யாதொரு பயனுமில்லை.

அண்மையில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றிற்கு ஆலய கணக்கில் பல கோடி பணம் மிதமிஞ்சியதாக இருப்பதாக வங்கியின் கடிதம் ஒன்று வந்ததாகவும் அதற்கு பிறகு புதிதாக கட்டப்பட்டிருந்த மதில் சுவர்  உடைக்கப்பட்டு மீண்டும் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அதாவது வங்கியின் ஸ்தாபன விதிக்கோவைக்கு அப்பாற்பட்டு பணம் வைப்பில் உள்ளதாகவும் வட்டிக்கு வட்டியென வட்டி பல குட்டிகளை போட்டுள்ளதாகவும் அதற்காக வங்கியிலிருந்து பணத்தினை மீளப் பெற்று ஒரு பகுதி வேலைகள் அப்பணத்தில் செய்ததாகவும் கணக்கு காண்பிக்க இந்த செயல் இடம் பெற்றதாக அறிய முடிகிறது.

ஆனால் சிறந்த ஆலய நிர்வாகமாக திகழும் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தினர் தாமாகவே முன்வந்து ஆலயத்தின் சார்பில் வறுமையினால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 25000 பெறுமதியான காசோலையினை அண்மையில் வழங்கியிருந்தார்கள்.

ஆலய நிர்வாகத்தினரின் சமூகத்திற்கு எடுத்துக்காட்டான இச் செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதோடு செல்வம் கொழிக்கும் கொழிக்கும் ஏனைய ஆலய நிர்வாகத்தினரும் இவ்வாறான உயரிய சமூகப்பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு உத்தேசிக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.

No comments

Powered by Blogger.