மகனை விரைவில் விடுதலை செய்யுமாறு பேரறிவாளின் தாயார் வேண்டுகோள்!!முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தனது மகனை விரைந்து விடுதலை செய்யுமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பரோல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், பேரறிவாளன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, தனக்கும் கணவனுக்கும் 70இற்கும் மேல் வயதான நிலையில், தனது மகனுடன் கொஞ்சக் காலம் வாழ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “மகன் சிறைக்குச் சென்று 29 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மகனுடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு எனது மகனை விரைந்து விடுவிக்க வேண்டும். இதனைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

இதேவேளை, இந்த வருடம் பொங்கலுக்கு எமது மகனுடன் இருக்கலாம், பரோல் நீடிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.