தமிழக முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் பி.எஸ் பாண்டியன் காலமானார்!!!


முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர் பி.எஸ் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலை தேறியதால் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தனர். இன்று காலை திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

No comments

Powered by Blogger.