நிர்பயா வழக்கு – தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!!நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22 ஆம் திகதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், முகேஷ் சிங் என்ற குற்றவாளி தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றில் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், இது தண்டனையை தாமதமாக்க போடப்பட்டுள்ள மனுவாக தெரிகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தேவையேற்படின் விசாரணை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் எனவும் குறிப்பிட்டனர்.

தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி முகேஷ் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஏற்கனவே கருணை மனு அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.