தைப்பொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டுச் சம்பவம்:


யாழ் நகருக்கு அண்மித்த பகுதியில் வாள்வெட்டு வன்முறைக்குழு மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலாளிகள் பயணித்த மோட்டார்சைக்கிள்கள் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த கொட்டடிப் பகுதிக்கு மூன்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஏழுபேர் வாள்களுடன் சென்று அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. 

சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அங்கிருந்தவர்களும் கூச்சலிட கிராம மக்கள் ஒன்று திரண்டு தாக்குதலாளிகளைத் துரத்திய நிலையில் அவர்கள், தாங்கள் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டுவிட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post