சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்!!

சாம்சங் நிறுவனத்தின் 'சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்' ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் 'சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்' ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மெமரி வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதே ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 128 ஜிபி மெமரி வேரியன்ட்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ.5000 அதிகமாகும். மார்ச் 1-ஆம் தேதி முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி விற்பனைக்கு வெளியாகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக டுயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 10 பேஸ்டு ஒன் யு.ஐ 2.0, 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி இன்பினிட்டி ஓ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசசர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 48 எம்.பி மூன்று ரியர் கேமரா செட்டப், 32 எம்.பி செல்பி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 25 வாட் சார்ஜர், இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் மற்றும் மற்ற வழக்கமான கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரிஸ்ம் வொயிட், பிரிஸ்ம் பிளாக் மற்றும் பிரிஸ்ம் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
Previous Post Next Post