எடைகுறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகள், அதில் 13,070 சிசுக்கள் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எடை குறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகளில் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் சிறப்பான ஆட்சி நடத்திவருகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா ஆட்சியில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருப்பது தான் உயிரிழப்புக்கான முக்கிய காரணம். எடை குறைவாக இருப்பதற்கான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில் 1.5 கிலோ எடைக்கு குறைவாக 2.11 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் 22 ஆயிரத்து 179 குழந்தைகள் மும்பையில் பிறந்துள்ளன. மொத்தத்தில் 13,070 குழந்தைகளும், மும்பையில் மட்டும் 1,402 குழந்தைகளும் இறந்துள்ளன.

குழந்தைகள் குறைவாகப்பிறந்து இறப்பதும், போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் இறப்பதும் இந்தியாவில் அதிகரித்து வருவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Previous Post Next Post