மோடியும் அமிஷ்தாவும் 200 கருணாநிதிக்கும் 300 ஜெயலலிதாவிற்கும் சமம்- ராதாரவி!!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏன் வரவில்லை. இதனை இந்தியர்களாக இருந்தால் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது மூன்று கோடிப் பேர் உள்ளே நுழைந்து விட்டனர் அவர்களை வெளியே அனுப்பி தான் தீர வேண்டும்.

தஞ்சாவூர் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த, நாங்கள் போராடியதால் தான் தீர்வு கிடைத்தது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். நீங்கள்தான் பகுத்தறிவாளர் ஆயிற்றே நீங்கள் ஏன் கும்பாபிஷேகம் செய்ய போராடுகிறீர்கள்.

மோடியும் அமிஷ்தாவும் 200 கருணாநிதிக்கும் 300 ஜெயலலிதாவிற்கும் சமம். அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் பின்வாங்க மாட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியே மோடியை பாராட்டி விட்டார். குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, வெளியே இருந்து உள்ளே வரக்கூடாது என்றுதான் கூறுகிறோம். தவிர உள்ளே இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. திமுக தலைவரே போராட்டத்தை தூண்டிவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். இந்தியாவின் ஒரே தலைவர் மோடிதான். பாஜக விரைவில் தமிழ்நாட்டில் கால் வைக்கும்" என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post