ஆற்றில் மிதந்த சடலம்… நிலைகுலைந்து சரிந்த தந்தை; நாட்டை உலுக்கிய 7 வயது சிறுமியின் மரணம்!கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மாயமான 7 வயது சிறுமியின் சடலம் ஆற்றில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், விரிவான விசாரணைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமி தேவனந்தாவின் உடலில் காயங்கள் உள்ளிட்ட எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை பகல் மாயமான சிறுமியின் சடலம் இன்று காலை, குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுமியின் திடீர் மரணம் தொடர்பில் உறவினர்களும் பொதுமக்களும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
Previous Post Next Post