சனம் ஷெட்டிக்கு கல்யாணம் ஆயிடிச்சா? - நெற்றியில் குங்குமத்துடன் ஃபோட்டோ!பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி காதல் கதை அனைவரும் அறிந்த ஒன்று. நிச்சயதார்த்தம் செய்து கொண்டு இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி பிரிந்துவிட்டனர். இந்நிலையில் சனம் ஷெட்டி நெற்றியில் பொட்டு வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று இரண்டு பேரும் உறுதியாக சொல்லிவிட்டனர்.நெற்றியில் பொட்டுடன் உள்ள ஃபோட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நெற்றியில் பொட்டு வைத்து இருப்பதால், அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற ரேஞ்சில் நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.
Previous Post Next Post