பாடசாலை மாணவர்களுக்கான சமூக விஞ்ஞான செயற்பாட்டு கண்காட்சி!!

LEON
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரி சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்பாட்டில் சமூக விஞ்ஞான செயற்பாட்டினை மாணவர்களுக்கு செயற்பாட்டின் மூலம் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் அதிபர் கே .அருமைராஜா தலைமையில் நடைபெற்றது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , கல்லூரி ஆசிரியர்கள் கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

இக்கண் காட்சியானது பாடசாலை மாணவர்களின் செயற்பாட்டு கல்வி அடைவு மட்டத்தை உயர்த்தும் வகையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் முதல் முறையாக நடாத்தப்படுகின்ற கண்காட்சியாகும்.

Previous Post Next Post