வவுனியாவில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு!!

வவுனியா- ஓமந்தை, அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்திலுள்ள கிணறொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் 26 வயதுடைய அர்ஜீனன் அருன்குமார் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து குறித்த இளைஞரைக் காணவில்லையென உறவினர் தேடிய நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை), குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post