உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான 'மோட்டேரா ஸ்டேடியம்' 4 ஆண்டுகளில் அதிநவீனமாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற மோட்டேரா ஸ்டேடியம் திறப்பு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியபிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றனர். 

பகலிரவு போட்டிகளின்போது நான்கு திசைகளில் இருந்தும் மின்னொளி பரவும் வகையில் அந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதோடு, வீரர்களின் நிழல் 4 திசைகளிலும் விழும் என்பதால், இதனைத் தடுக்க LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மிகச்சிறந்த மழைநீர் வடிகால் வசதி மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 800 கோடி (இந்திய ரூபாய்) செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1,10,000 இரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை இரசிக்க முடியுமென்பதால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்படுகிறது.

இதுவரைக் காலமும், அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானமே உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்பட்டு வந்தது. அதில் 90,000 இரசிகர்கள் அமரலாம்.

இந்நிலையில், நேற்றைய தினம் அகமதாபாத்தில் திறந்து வைக்கப்பட்ட 'மோட்டேரா ஸ்டேடியம்' உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெயரை பெற்றுள்ளது.

Previous Post Next Post