டுபாய் பகிரங்க டென்னிஸ்;காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்!!

ஆண்களுக்கான டுபாய் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் இத்தொடர், கடினத் தரையில் நடைபெறும் ஒரு தொடராகும்.

இரசிகர்களை குதுகலப்படுத்திவரும் இத்தொடரில் தற்போது காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், பிரான்ஸின் கேல் மொன்பில்சும், சகநாட்டு வீரரான ரிச்சர்ட் கேஸ்கெட்டும் மோதினர்.

பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் கேல் மொன்பில்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்வும் மோதினர்.

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், பெரிதும் நெருக்கடிகளை எதிர்கொள்ளாத நோவக் ஜோகோவிச், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்சும். ஜேர்மனியின் ஜோன்-லெனார்ட் ஸ்ட்ரஃப்பும் மோதினர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என ஜான்-லெனார்ட் ஸ்ட்ரஃப் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய, ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 6-4 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ், செட்டை 6-4 என கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ்வும், பிரித்தானியாவின் டான் எவன்ஸ்சும் மோதினர்.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என டான் எவன்ஸ் வென்றார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆண்ட்ரி ரூப்லெவ், டான் எவன்ஸ்க்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.

இதில் ஆக்ரோஷமாக விளையாடிய டான் எவன்ஸ், கடுமையாக போராடி 7-6 என செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.Previous Post Next Post