மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்!!

நடிகை ரம்யா நம்பீசன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர். தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சி.ஏ.ஏ., சட்டத் திருத்தத்தை வைத்து, டில்லியில் நடக்கும் போராட்டங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் வன்முறைகள் எல்லாம், மனிதனை மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகும் பிரிக்கிறது. 

ஆனால், மனிதன் என்பவன் ஒருவனே தான். அவனுக்கு எந்த மதமும் இல்லை என்பதை குறிக்கும் வகையில், மனித எலும்புக் கூட்டை வைத்து, தன்னுடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ரம்யா நம்பீசன். 

அதில் ஒவ்வொரு மதம், ஜாதியின் பெயர்களை பதிவிட்டு எல்லோருமே மனிதன் தான் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது, டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
Previous Post Next Post