சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம்; அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!!

லியோன்
சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி வங்கி கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் பாடசாலை மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி . வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மாதாந்தம் தலா 1500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது . 

மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் மண்முனை வடக்கு சமுர்த்தி திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் மண்முனை வடக்கு சமுர்த்தி திணைக்கள முகாமையாளர் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .
Previous Post Next Post