சஹ்ரான் ஹாசிமின் சகோதரிக்கும் அவரது கணவனுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் சகோதரி மற்றும் அவரது கணவன் ஆகிய இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரானின் சகோதரியான முகமது காசிம் முகமது மதனியா மற்றும் அவரது கணவரான முகமது நியாஸ் ஆகியோர் கடந்த வருடம் மே முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாகிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


Previous Post Next Post