கொரோனா வைரஸின் உச்சம்; ஈரானிய நாடாளுமன்றம் மூடப்பட்டது!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது சீனாவைத் தாண்டி பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது.

இதன்படி, ஈரானில் அதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய நாடாளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் மேலதிக அறிவிப்பு வரும் வரை நாடாளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொற்றுநோயைச் சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நழலயில் ஈரானில் கொரோனா தொடர்பான உயிரிழப்புனக்கள் 34 ஆகப் பதிவாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் செயற்பாடும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post