மலேசியாவின் புதிய பிரதமர் அன்வர் இப்ராகிம்?

மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட்டின் திடீர் பதவி விலகல் நகர்வை மலேசிய மன்னர் ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து புதிய பிரதமர் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய அடுத்த பிரதமர் எனக் கருதப்படும் அன்வர் இப்ராகிம் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஹதீர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அவரது பதவி விலகள் அறிவிப்பு வெளியானது.

அன்வர் இப்ராகிமை புறக்கணித்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மஹதீர் புதிய கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியப் பிரதமர் மஹதீர் மொஹமட் நேற்றைய தினம் தனது இராஜினாமா கடிதத்தை மன்னரிடம் சமர்ப்பித்தpருந்தார்.

புதிய கூட்டணி அரசு ஆட்சியமைக்க வழிகோலும் வகையில் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post