கொரோனா தாக்கம் இத்தாலியில் ஆறு பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, நாடு முழுவதும் 222 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறையின் தலைவரும், கொரோனா வைரஸ் அவசரகால அசாதாரண ஆணையாளருமான ஏஞ்சலோ பொரெல்லி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில், 101 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 27 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 213 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள விடயத்தை அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று நண்பகல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பெரும்பாலான நோய்த் தொற்றாளர்கள் லோம்பார்டி பிராந்தியத்திலேயே காணப்படுகின்றனர். தலைநகர் மிலனல், 84 மற்றும் 88 வயதுடைய இருவர் ஒரே இரவில் உயிரிழந்துள்ளனர்.

லோடி, கிரெமோனா மற்றும் பாவியா நகரங்களில் 90 சதவீதமான நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post