சஜித் தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிட ரிஷாட் முடிவு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த சின்னம் ஒரு பிரச்சினை இல்லை என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அன்னம் சின்னத்தில் அல்லது யானையின் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறாரா என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவருக்கே தனது ஆதரவு என்றும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்டதை பிரதி நிதித்துவ படுத்தியே போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை குறித்த கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக இன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியியும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post