கிழக்கு யோர்க்ஷயரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

கிழக்கு யோர்க்ஷயரின் சில பகுதிகளில் வெள்ளநீரின் அளவு நேற்றிரவு சடுதியாக உயர்ந்ததால் குடியிருப்பாளர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எயர் நதியிலிருந்து (River Aire) வெள்ளம் பெருக்கெடுத்ததால் கிழக்கு கோவிக்கில் (East Cowick) உள்ள வயல் நிலங்கள் முழுவதும் நீரால் நிறைந்தன.

அவசர சேவைகள் பிரிவினர் படகுகள் மூலம் அங்கிருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.

இதற்கிடையில், ஷ்ரோப்ஷையரில், ஆற்றின் நீர்மட்டம் குறையுமானால் வெள்ளப் பாதுகாப்புத் தடுப்புக்களின் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என சுற்றுச்சூழல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் நாட்டைத் தாக்கவிருக்கும் ஜோர்ஜ் புயலுக்கு முன்னர் திருத்தங்களைச் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் ஸ்னைத் (Snaith) நகரிலுள்ள வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான லீற்றர் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதற்காக ஒரு நிமிடத்திற்கு 8,000 லீற்றர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்ட பெரிய பம்ப் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Previous Post Next Post