பத்தரமுல்ல சீலரத்னதேரர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயம்!!

லியோன்
மட்டக்களப்பிற்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனசெத பெரமுனகட்சித்
தலைவரும் , பத்தரமுல்ல வாரண மங்கலஹிரி அறநெறி பாடசாலை பூஜ
பத்தரமுல்ல சீலரத்னதேரர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயத்தை
மேற்கொண்டுள்ளார்.

சிறைச்சாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட தேரர் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த பூஜ பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அதிஷ்டமிக்க தமிழ் சிங்கள
மக்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்; நான் பௌத்த மத குரு என்ற வகையில் அனைத்து பௌத்த குருமார்களுக்கு , சிங்கள மக்களுக்கும் அதேவேளை தமிழ் மக்களின் முன்னிலை படுத்தியவனாக கடந்த நான்கரை வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை பார்வையிட வந்துள்ளேன் .

உண்மையாக கடந்த நல்லாட்சி அரசாங்கம் கைதுசெய்தவர்களை நீண்ட
காலம் சிறையில் வைத்திருந்தார்கள் , அதேவேளை அவர்களது
வழக்குகளை காலதாமதம் செய்கிறார்கள் , இவ்வாறானது பழிவாங்கள் ஒரு அரசியல் பழிவாங்கலாகும் . 

நான் கூறுகின்றேன் மத்திய அரசு முன்னின்று சிவநேசத்துரை
சந்திரகாந்தனை பிணை வழங்கி அவருடைய பணிகளை செய்வதற்கு
இடமளிக்க வேண்டும் என்று , இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் சிங்கள
மக்கள் ஒன்றிணைத்து நாட்டின் அபிவிருத்திக்காக செயல்படுகின்ற இந்த
நேரத்தில் இவ்வாறான செயலானது கவலைக்குரிய விடயமாகும் .

இவரது வழக்கு தொடர்பான விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெறுவதால் அது தொடர்பான விடயங்களை எனக்கும் எதுவும் கூறமுடியாது , இருந்தும் நான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது இவரது வழக்கினை கூடிய விரைவில் நிறைவு செய்து , இவர் தொடர்பில் குற்றம் நிருபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை வழங்கப்பட்டு அவருக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று , உண்மையாக தற்போது நாம் நாட்டின் பிரஜை என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் , அழிந்து போன இந்த தாய் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணைய வேண்டும் என அனைத்து மத குருமார்கள் சார்ப்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துக்கொண்டார்.Previous Post Next Post