சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்டில் பங்களாதேஷ் அபார வெற்றி!

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸிற்காக 265 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிரைஜ் எர்வீன் 107 ஓட்டங்களையும், பிரின்ஸ் மஸ்வாரே 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், அபு ஜெயிட் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 560 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 203 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 132 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் 71 ஓட்டங்களையும், லிடொன் தாஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ஐன்ஸ்லி என்ட்லோவ் 2 விக்கெட்டுகளையும், டொனால்ட் ரிபானோ, விக்டர் நியாச்சி, ஷிகண்டர் ரஸா, சார்ல்டன் ஷுமா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 295 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி, 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிரைஜ் எர்வீன் 43 ஓட்டங்களையும், டிமிசென் மருமா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், நயீம் ஹசன் 5 விக்கெட்டுகளையும், தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 318 பந்துகளில் 28 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் தெரிவு செய்யப்பட்டார்.
Previous Post Next Post