வெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டொக்டர் திரைப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனாவின் மகள் ஜாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அர்ச்சனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துவருகிறார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post