கட்டார் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்!!

பெண்களுக்கான கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது இரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் இத்தொடர், கடினத் தரையில் நடைபெறும் ஒரு தொடராகும்.

இரசிகர்களை குதுகலப்படுத்திவரும் இத்தொடரில் தற்போது காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், செக் குடியரசின் பெட்ரா க்விடோவாவும் கஸகஸ்தானின் ஒன்ஸ் ஜாபூரும் மோதினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், இரண்டு செட்டுகளுமே டை பிரேக் வரை நீண்டது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய பெட்ரா க்விடோவா 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் பெலிண்டா பென்சிக்கும், ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவும் (ளுஎநவடயயெ முரணநெவளழஎய) பலப்பரீட்சை நடத்தினர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் குஸ்நெட்சோவா வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், சீனாவின் ஸெங் சைசாய்யும் (ணூநபெ ளுயளையi), பெலரஸ் வீராங்கனை ஆர்னா சபாலெங்காவும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை 6-3 என ஸெங் சைசாய் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆர்னா சபாலெங்கா பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடினார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஆர்னா சபாலெங்கா, 7-6 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் தொடர்ச்சியாக அதே ஆக்ரோஷத்துடன் விளையாடிய ஆர்னா சபாலெங்கா, 6-3 என செட்டைக் கைப்பற்றி, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும். ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவும் மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஆஷ்லே பார்டி 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆஷ்லே பார்டிக்கு கர்பீன் முகுருசா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது.

இதில் ஆக்ரோஷமான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கர்பீன் முகுருசா 7-6 என செட்டைக் கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது. இதில் யாரும் எதிர்பாராத அளவு சிறப்பாக விளையாடிய ஆஷ்லே பார்டி செட்டை 6-2 என கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


Previous Post Next Post