"டிக்கெட் எடுக்காமல்" விமானத்திற்குள் சிறகடித்த புறாக்கள்; பயணிகள் பரபரப்பு!!

டிக்கெட் எடுத்த பயணிகளை டிக்கெட் எடுக்காமல் விமானத்திற்குள் உள்ளே நுழைந்து பறந்து பறந்து பரபரப்புக்குள்ளாகின புறாக்கள்.

அகமதாபாத் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்படத் தயாரான கோ ஏர் நிறுவன விமானத்துக்குள் 2 புறாக்கள் பறந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கோ ஏர் நிறுவன விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தினுள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு 2 புறாக்கள் பறந்து சென்றன.

அதனை பார்த்து சில பயணிகள் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் சிரித்ததோடு, வீடியோவும் எடுத்தனர். ஒரு பயணியோ பறந்த புறாக்களை பிடிக்கவும் முயன்றார்.

இதையடுத்து புறாக்கள் வெளியேற்றப்பட்டு 30 நிமிடம் தாமதத்திற்கு பின்னர் விமானம் புறப்பட்டது. இதற்காக கோ-ஏர் நிறுவனம் பயணிகளிடம் வருத்தமும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post