டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் உயிரிழப்பு

டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்படும் Covid-19 நோயினால் உயிரிழந்த முதல் பிரித்தானிய நபராவார்.

கப்பலில் இருந்து கொரோனா வைரஸால் உயிரிழந்த ஆறாவது நபர் இவர் என்று ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரித்தானியப் பிரஜையின் மரணம் குறித்த அறிக்கைகளை விசாரணை செய்து வருவதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

30 பிரித்தானியப் பிரஜைகள் மற்றும் இரண்டு ஐரிஷ் பிரஜைகள் அடங்கிய குழு கடந்த சனிக்கிழமை டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பினர்.

வீரலில் உள்ள அரோ பார்க் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அங்கு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் டயமன்ட் பிரின்செஸ் கப்பல் இந்த மாதத் தொடக்கத்தில் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டது.

பயணிகள் ஆரம்பத்தில் தங்களது அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவ்வப்போது கப்பலின் தளத்தில் வெளியே உலவ அனுமதிக்கப்பட்டனர்.

கப்பலில் இருந்த பயணிகளில் குறைந்தது 621 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நன்றி 
Previous Post Next Post