கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பகுதிகளை கைப்பற்றி சிரிய படை

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று பகுதிகளை அரச தலைவர் பஷார் அல் அசாத்தின் அரச படைகள் கைப்பற்றியுள்ளன.

ரஷ்யப் படையினரின் உதவியுடன் வடமேற்குப்பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் அல் அசாத்தின் படைகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அல் நக்யார்இ அர நபியாஇ அல் டையிர் ஆகிய பகுதிகளை கைப்பற்றியுள்ளன.

சிரிய அரசுப் படைகளால் தாம் கொல்லபடுவதை தவிர்ப்பதற்காக, ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் மேற்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பஷர் அல்-அசாத் ஆட்சி ஜனநாயக சார்பு போராட்டங்களை முறியடித்ததன் விளைவாக 2011 முதல் சிரியா மோசமான உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post