அரச சேவை என்பது வேலைவாய்ப்பு அல்ல- ஜனாதிபதி கோட்டாபய!!

அரச சேவை என்பது மக்களுக்காக சேவை செய்கின்றதொரு சேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதாவது மாறாக அரச சேவையென்பது வேலைவாய்ப்பு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, "ஒவ்வொரு நாளும் சம்பள உயர்வு பதவி உயர்வு கோரி பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய கோரிக்கைகள் அனைத்துக்கும் எம்மால் தீர்வை முன்வைக்க முடியும். அது எப்போதென்றால் அரச வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவேயாகும்.

அத்துடன் அரச வருவாயை அதிகரிப்பதைப்போன்று கழிவுகளை குறைத்தல் மற்றும் ஊழலை ஒழித்தல் ஆகியவற்றையும் பொது சேவையின் ஊடாகவே செயற்படுத்த முடியும்.

எனவே, தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பொது சேவையை திறம்பட செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.


Previous Post Next Post