உக்கிரமடைந்து வரும் மோதல்: சிரிய அரசு படைகளை பின்வாங்குமாறு துருக்கி வேண்டுகோள்!

துருக்கி அரசின் இராணுவக் கண்காணிப்புத் தளங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்து சிரிய அரசு படைகள் பின்வாங்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அங்காராவில் இடம்பெற்ற உயர்நிலை பாதுகாப்பு கூட்டத்தின் போதே ஜனாதிபதி எர்டோகன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

எனினும், சிரியா மற்றும் ரஷ்யா இதனை மறுத்துள்ளதோடு, துருக்கி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்த் தரப்பினரின் கையில் இருக்கும் கடைசி மாகாணமான இட்லிப் மாகணத்தில், ரஷ்ய ஆதரவு சிரியப் படைகள் உக்கிரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

துருக்கிப் படைகளின் ஆதரவுபெற்ற கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து இட்லிப் நகரை திரும்பப்பெறும் ஒரு முயற்சியாக வட மேற்கு சிரியாவில், சிரியா அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 34 துருக்கியப் படையினர் உயிரிழந்தனர்.

தற்போது சிரிய அரசுப் படைகள் இருக்கும் இடங்களை இலக்குவைத்து துருக்கி பதில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
Previous Post Next Post