கொரோனா விவகாரம்;"எதிர்வு கூறலையே முன் வைத்திருந்தோம்"-வைத்திய சங்கத்தினர்; முடிவெடுத்த வியாழேந்திரன் எம்.பி!!

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் உள்ள மாந்தீவினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கொரோனா வைத்தியசாலை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பதாக ஊடகங்கள் வாயிலாக பரவலான செய்திகள் வெளியாகியிருந்தன. 

இந்த விடயத்தினை கருத்தில் எடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் வியாழேந்திரன் எம்.பி தலைமையில் இன்று மாலை அவசர கூட்டமொன்று இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி,காணி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். 

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு புதிதாக மட்டக்களப்பு மாந்தீவில் வைத்தியசாலையென்பது பல பாதிப்புகளை உண்டாக்கும் என்றும் அது அப்படியே இருக்க மட்டு- போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பிரிவினை விஸ்தரித்து அங்கேயே அதற்கான பரிசோதனை மற்றும் வைத்திய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இங்கு கருத்துக் கூறிய வைத்திய அதிகாரிகள்.....

மட்டக்களப்பு மாவட்டம் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கான சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றலாம் என்ற ஒரு எதிர்வுகூறலே செய்யப்பட்டதாகவும் அந்த இடத்தினை தெரிவுசெய்யுமாறு கோரவில்லையெனவும் இங்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.


Previous Post Next Post