அரசின் 1000 ரூபாய் வாக்குறுதி காலம் அமுல் – சம்பளம் வழங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை!!

மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதி அமுலாகும் காலம் இன்று (01) முதல் ஆரம்பமாகியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க அண்மையில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்து, "மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருத்தல் வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் அனுமதி கிடைத்ததாக அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையிலேயே இன்று குறித்த தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கும் வாக்குறுதிக் காலம் அமுலுக்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும் சம்பளம் வழங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இன்று அரச தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.Previous Post Next Post