சீனாவிலிருந்து 1,050 வகைப் பொருட்களின் இறக்குமதி முடங்கியது- மாற்றுவழியைத் தேடும் இந்தியா

கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து 1,050 வகைப் பொருட்களின் இறக்குமதி முடங்கியிருப்பதால், வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யும் உபாயத்தை கண்டறியும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.

ஜவுளி துணிகள், ஆன்டிபயோடிக் மருந்துகள், தொலைபேசிகள் உள்ளிட்ட 1,050 வகை பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கொரானா பாதிப்பால் இறக்குமதி முடங்கியிருப்பதால், ஆன்டிபயோடிக் மருந்து இறக்குமதி குறித்து இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளுடனும், தொலைபேசி, மின் சாதனங்களின் இறக்குமதி குறித்து சில நாடுகளுடனும் இந்தியா பேசி வருகிறது.

உலக சந்தையில் சீனாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தியா நிரப்புவது குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.


Previous Post Next Post