புதுச்சேரியில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

புதுச்சேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மார்ச் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டடுள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தமிழகத்திலும் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் நாளை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியா முழுவதும் நாளையை தினம் நாள்முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post