மட்டக்களப்பில் இருந்து இ.போ.சபையின் கொழும்பிற்கான தூர சேவை பேருந்து இன்று மதியம் 12 மணிக்கு!! UPDATE

அத்தியாவசிய தேவைகளிற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் பிரயாணிகளின் நலன் கருதி இ.போ.சபையின் மட்டக்களப்பு சாலைப் போக்குவரத்து சேவை ஒன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இந்த பேருந்து சேவையானது இன்று மதியம் 12 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிய பயணத்தினை ஆரம்பிக்கும் என்றும் அதே பேருந்து இன்று இரவு 10 மணிக்கு திரும்பவும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு திரும்பும் எனவும் மட்டக்களப்பு அரச சாலையின் முகாமையாளர் கிருஸ்ணராஜா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்ட போதும் இச்சேவையானது அத்தியாவசிய சேவையாக கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPDAT- நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கொழும்பிலிருந்து இரவு 10 மணிக்கு திரும்பும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு- சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post