புத்தளத்தில், 1411 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு செல்லவில்லை! வெளியாகியுள்ள தகவல்

புத்தளத்தில் மாத்திரம் கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து வந்த 1411 பேர் இன்னும் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

குருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் நாடு திரும்பியுள்ள 212 பேர் இன்னும் மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொள்ளவில்லை என்று நிக்கரவெட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மறைந்துள்ள அவர்கள் தொடர்பில் பொதுமக்கள் கிராமசேவகர்களுக்கோ அல்ல பொதுசுகாதார அதிகாரிகளுக்கோ தகவல் தருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சர்வதேச தரவுகளின்படி அடுத்து வரும் இரண்டு வாரங்கள் இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தீர்மானமிக்க வாரங்களாக இருக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எனவே அதிகாரிகள் திட்டமிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று அந்த சம்மேளனம் கேட்டுள்ளது.
Previous Post Next Post