திருநங்கைகளுக்கு வீடு கட்ட ரூ.1.5 கோடி நிதி கொடுத்தார் திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் நடிகர்!

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான அக்ஷய் குமார் திருநங்கைகளுக்கு வீடுகட்டுவதற்காக நடிகர் லாரன்சிடம் ஒன்றரை கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தனது திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளை முன்னிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார். லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா வரிசை திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட். இந்நிலையில் தற்போது அவர் காஞ்சனா முதல் பாகத்தை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் இயக்கி வருகிறார்.

தமிழில் சரத்குமார் திருநங்கையாக நடித்த அந்த கதாப்பாத்திரத்தில், ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்கிரார். லக்ஷமி பாம் என்ற பெயரில் தயாராகி வரும் அந்தப்படத்திற்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மே மாதம் லக்ஷமி பாம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் திருநங்கைகளுக்கு வீடு கட்ட ரூ.1.5 கோடி நிதியை லாரன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். அந்த நிதியை திருநங்கைகள் முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பெற்றுக்கொண்டார். நடிகர் அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.Previous Post Next Post