ஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட 447 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விளையாட்டு மைதானங்களில், வாகனங்களில் பயணம் செய்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவது மற்றும் பொது இடங்களில் மது அருந்திய குற்றச்சாட்டுக்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸார் ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து விதிமுறைகளையும் பின்னற்றவும் வீடுகளுக்குள் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post