18 மணி நேரத்திற்கு பிறகு கட்டுக்குள் வந்த மாதவரம் ரசாயன ஆலை தீ - சுமார் 120 கோடி ரூபாய் இழப்பு!

சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மாதவரம் ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் திடீரென தீப்பற்றியது. கரும்புகையிடன் தீ வேகமாக அருகில் நின்று கொண்டிருந்த பழைய லாரிகள் மீதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.

அதனைத் தொடர்ந்து 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயின் வீரியம் குறையவில்லை. தீ கட்டுக்கடங்காமல் எரிந்தால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 25 தீயணைப்பு வாகனங்கள், 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20 தனியார் தண்ணீர் லாரிகள் ஆகியவை வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

சுமார் 18 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தலைமையிலான குழு, சென்னை மாநகர 0 காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிடங்கின் உள்ளே அதிக அளவிலான ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்ததால் அனைத்தும் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post