கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருடன் ரயிலில் பயணம் – 193 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருடன் ரயிலில் சென்னை வந்த 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.

இந்தநிலையில் தமிழகத்தில், கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் இருந்து டெல்லி வந்து, அங்கிருந்து கடந்த 17ஆம் திகதி ரயில் மூலம் சென்னை வந்த 21 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தற்போது அந்த இளைஞர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் அயர்லாந்து இளைஞருடன் ரயிலில் பயணம் செய்த 193 பேரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த இளைஞருடன் பயணம் செய்த 193 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.Previous Post Next Post