சமநிலையில் முடிவடைந்த 20ஆவது வீரர்களின் போர்!

மகாஜனக்கல்லாரி மைதானத்தில் நடைபெற்ற 20 ஆவது வீரர்களின் துடுப்பாட்ட போரில் ஸ்கந்தரோதயா கல்லூரி ,மகாஜனா அபாரஆட்டம்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அணியினர் களத்தடுப்பை தீர்மானித்தனர். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனனாக்கல்லூரி அணியினர் 69.1 ஓவர்கள் நிறைவில் 313 ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தினர்.துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தனிஸ்ரன்75,வரக்சன்-51,மதீசன்-49,சிலக்சன்-46 ஓட்டங்களை பெற்றனர்.பந்துவீச்சில் பிரசன்,டனுஸ்ராஜ்,கௌரிசங்கர் தலா 2விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

அதன்பின்னர் தனது 1ஆவது இனிங்ஸை ஆரம்பித்த ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் சதுர்சனின் அச்சுறுத்தலான பந்துவீச்சிற்கு முகங்கொடுக்க முடியாது திணறினர்.முதல் நாள் முடிவின் போது 68/4 என்ற சற்று தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தனர்.களத்தில் டான்சன்-21 ஓட்டங்களுடனும்,டனுஸ்ராஜ்-19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இருப்பினும் இருவரும் இரண்டாம் நாள் ஆம்பம் முதல் அடித்தாடி ஓட்டங்களை குவித்தனர்.5 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 136 ஓட்டங்களை பெற்றிருந்த போது டான்சன் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டான்சன் ஆட்டமிழந்து சற்று நேரத்தில் மறுமுனையில் நிலைத்து நின்றாடிய டனுஸ்ராஜ் அரைச்சத வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து7ஆவது விக்கெட்டுக்காக மீண்டுமொரு சிறப்பான இணைப்பாட்டமாக பிருந்தனும் ,கௌரிசங்கரும் இணைந்து நிதானமாக ஆடி இருவரும் சதத்தை பெற்றனர்.இணைப்பாட்டமாக 257 ஓட்டங்களை பெற்றிருந்த போது 120 ஓட்டங்களுடன் பிருந்தன் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய கௌரிசங்கரும் 129 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கக ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர்97.4ஓவர்களில் 500ஓட்டங்களுக்கு 9இலக்குகளை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தனர்.

2ஆம் நாள் முடிவடைய 8 ஓவர்கள் மாத்திரம் இருந்தநிலையில் இரு அணித்தலைவர்களின் சம்மதத்துடன் நடுவர்களால் ஆட்டம் சமநிலையென அறிவிக்கப்பட்டது.

Previous Post Next Post