2015 இல் இன்றைய வைரஸ் பற்றி எச்சரித்த பில்கேட்ஸ் தற்போது என்ன கூறுகிறார்....?

சில மாதங்கள் தொடக்கம் இப்பொழுதுவரை முடிவு தெரியாது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்னரே மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் எச்சரித்திருந்த காணொளி இணையங்களில் பரவலாகி வருகின்றது. 

2015ம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தெரிவித்திருந்தார்.

அடுத்த பத்தாண்டுகளில் உலகிற்கும் மனித இனத்திற்கும் பேராபத்தாக போர் இருக்காது. அதைவிட பேராபத்தாக வைரஸ் இருக்கும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கொடிய வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் சுமார் ஒரு கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


2015ம் ஆண்டில் பரவிய எபோலா வைரஸை கட்டுப்படுத்த தேவையான திட்டங்களும் வழிவகைகளும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும் சுகாதாரத்துறையினர் துல்லியமாக செயற்பட்டதாலேயே அதனை கட்டுக்குள் வைக்க முடிந்தது எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

எபோலா ஒரு தொற்று நோயாக இருந்தாலும் அது காற்றின் மூலம் பரவவில்லை என்பதாலே உலக நாடுகளில் மிகப்பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஆனால் அடுத்தமுறையும் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது.

அடுத்தமுறை ஏற்படும் வைரஸ் தொற்றினை தடுக்க உலக நாடுகள் இணைந்து போராட வேண்டிவரும் என அப்போதே பில் கேட்ஸ் ஆரூடம் தெரிவித்திருந்தார்.

அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கே கோடிக்கணக்கான பணத்தை உலக நாடுகள் செலவிடுகின்றன. ஆனால் தொற்று நோயை தடுக்கும் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

தொற்று நோய் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வல்லுநர்களும் தொற்று நோயியல் நிபுணர்களும் இல்லை எனவும் பில் கேட்ஸ் கூறியிருந்தார்.

அன்று பில் கேட்ஸ் கூறிய கூற்றுக்கு இணங்க இன்று உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயினை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது பல நாடுகளில் பரவியுள்ள நிலையில் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் குறுகிய காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை தயாரிக்க பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதிலும், இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

இதேவேளை உலகளாவிய ரீதியில் தவிர்க்க முடியாத கணணி தொழில்நுட்பத்தின் நாயகனாக வலம் வந்த பில் கேட்ஸ், அவரினால் ஆரம்பிக்கப்பட்ட மைக்ரோசொப்ட் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார்.

கணினித் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் ஜனநாயகப்படுத்திய பில் கேட்ஸ், மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இருந்து விலகியமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இருந்து விலகிய பில்கேட்ஸ் மக்கள் நலன் சார்ந்த செயல்களில் அதாவது உலகளாவிய ரீதியில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சி, மருத்துவம், காலநிலை மாற்றம் ஆகியவற்றில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவுள்ளார்.

மேலும் அவர் தற்போது தெரிவிக்கையில்,

வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை (Lock Down) பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். 

முழு அடைப்பை பின்பற்றினாலே ஓரளவு கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பு மருத்தை செயற்படுத்த இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் எனவும் ஆனாலும் அதனை உறுதியாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் ஏற்படும் என பல்வேறு நிபுணர்களினால் பல நூற்றாண்டுக்கு முன்னர் குறிப்பிட்டதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post