இன்றைய நாளின் ராசி பலன்கள்(22.03.2020)


மேஷம் : எதிலும் சுதந்திர மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். கூடுதலான பணவரவை பெறுவீர்கள். குடும்ப பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியுடன் கூடிய நிம்மதி ஏற்படும்.

ரிஷபம் : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். நிலுவைப் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். பணவரவுடன் கூடிய நன்மை இருக்கும். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.

மிதுனம் : எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருளை வாங்க வேண்டாம். சீரான ஓய்வு நல்ல உடல்நலம் பெற உதவும்.

கடகம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். விஷப்பிராணிகளிடம் இருந்து விலகுவது நல்லது. பெண்கள் நகையை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம்.

சிம்மம் : நண்பர்கள் மத்தியில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் வளர்ச்சி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வர்.

கன்னி : மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். பணிகளை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

துலாம்: குடும்பத்தினரிடம் ஒற்றுமை அவசியம். தொழிலில் உருவாகிற இடையூறை தாமதமின்று சரிசெய்வது நல்லது. எதிர்பாராத வகையில் செலவு ஏற்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

விருச்சிகம்: மனதில் சஞ்சலம் தோன்றி பின் மறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஓவ்வாத உணவை தவிர்க்கவும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: நண்பரிடம் எதிர்பார்த்த உதவியை பெறுவீர்கள். செயல்களில் உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருளை வாங்கித் தருவர்.

மகரம் : உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். சொந்தப் பணியில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சியால் அனுகூலத்தை பெறுவீர்கள். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் : இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்கள் நிர்வாக நடைமுறை சிறக்க நல்ல கருத்துக்களை சொல்வீர்கள்.

மீனம் : கவனக் குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவர் தரும் ஆலோனை மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்பத் தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும்.
Previous Post Next Post
HostGator Web Hosting